Kisan Credit Card Scheme: கிசான் கிரெடிட் கார்டு என்பது விவசாயிகளை கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்கவும், விவசாயத்திற்கு குறைந்த விலையில் கடன் கிடைக்கவும் தொடங்கப்பட்ட ஒரு சிறந்த திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 2022 பட்ஜெட்டில், KCC கடனின் வரம்பை அரசாங்கம் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிசான் கிரெடிட் கார்டு வரம்பு அதிகரிக்கக்கூடும்


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை (Budget 2022) தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பெரிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்கின்றனர் நிபுணர்கள். 


சில காலமாக, விவசாயிகள் பிரச்சினை நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, விவசாயிகளுக்காக மத்திய அரசு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும். விவசாய நிபுணர்களின் கூற்றுப்படி, மோடி அரசாங்கம் கிசான் கிரெடிட் கார்டின் வரம்பை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் (KCC interest rate) கடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கிசான் கிரெடிட் கார்டு கடன் வட்டி விகிதம்


கிசான் கிரெடிட் கார்டில் வாங்கப்படும் கடனுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால், விவசாயி கடனை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தினால், 4 சதவீத வட்டி மட்டும் செலுத்தினால் போதும். 


பயிர் காப்பீடும் கிடைக்கிறது


இது விவசாயிகளுக்கு மிக நல்ல திட்டமாகும். கிசான் கிரெடிட் கார்டு மூலம், விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பீடு செய்யலாம். ஏதாவது காரணத்தால், தங்களின் பயிர்கள் அழிந்துபோனால், அவர்கள் இதற்கான இழப்பீட்டைப் பெறலாம். வெள்ள காலத்தில், தண்ணீரில் மூழ்கி பயிர் கெட்டுப்போனாலோ அல்லது வறட்சியின் போதும் பயிர் கருகிப்போனாலோ, கிசான் கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


ALSO READ | விவசாயிகளுக்கு சூப்பர் செய்தி: வீட்டிலிருந்தபடியே இந்த வசதியை பெறலாம், முழு செயல்முறை இதோ 


கிசான் கிரெடிட் கார்டின் அம்சங்கள் (KCC Loan Scheme)


- சேமிப்பு வங்கியின் விகிதத்தில் KCC கணக்கில் கடனுக்கு வட்டி வழங்கப்படுகிறது.
- கேசிசி கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச ஏடிஎம் கம் டெபிட் கார்டு வழங்கப்படுகிறது.
- ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), ஸ்டேட் பாங்க் கிசான் கார்ட் என்ற பெயரில் டெபிட் / ஏடிஎம் கார்டை வழங்குகிறது.
- KCC இல், 3 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு ஆண்டுக்கு 2% வட்டி மானியம் கிடைக்கிறது.
- கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தும்போது ஆண்டுக்கு 3% வீதத்தில் கூடுதல் வட்டி மானியம் கிடைக்கிறது.
- KCC கடனில் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்கிறது.
- விவசாயச் செலவு, அறுவடைக்குப் பிந்தைய செலவு, நிலத்தின் விலை ஆகியவற்றின் அடிப்படையில் முதல் ஆண்டுக்கான கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது.


KCC திட்ட விதிமுறைகள்  (KCC Scheme terms)


- 1.60 லட்சம் வரையிலான கடனுக்கு பாதுகாப்பு தேவையில்லை.
- ஒரு வருடத்திற்கு 7% வீதம் அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தும் தேதி வரை, எது முந்தையதோ அதுவரை வட்டி விதிக்கப்படும்.
- உரிய தேதிக்குள் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில், அட்டை விகிதத்தில் வட்டி செலுத்த வேண்டும்.
- நிலுவைத் தேதிக்குப் பிறகு அரையாண்டு முதல் கூட்டு வட்டி வசூலிக்கப்படும்.


கிரெடிட் கார்டு திட்டத்தின் நன்மைகள் (Kisan credit card benefits)


- நாட்டின் அனைத்து விவசாயிகளும் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இத்திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள 14 கோடி விவசாயிகள் பயன்பெறுவர்.
- இந்த திட்டத்தின் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவில் இருந்து வழங்கப்படும்.
- கிசான் கிரெடிட் கார்டு மூலம் மத்திய அரசு (Central Government) ரூ.1.60 லட்சத்தை கடனாக வழங்குகிறது.


ALSO READ | Budget 2022 நல்ல செய்தி: 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கக்கூடும் வரி விலக்கு உட்பட பம்பர் பரிசுகள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR