Budget 2022: மாத சம்பளம் வாங்குவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? நிறைவேற்றுமா அரசு?

Union Budget 2022: சம்பள வகுப்பினரிடையே, வருமான வரி வரம்புகளில் (Income Tax Slab) மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2022, 06:36 PM IST
  • ஒன்றிய நிதியமைச்சர் பிப்ரவரி 1 அன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
  • பட்ஜெட் தாக்கல் குறித்து பொதுமக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
  • வருமான வரி சட்டத்தின் பிரிவுகளில் சலுகைகளை அதிகரிக்க கோரிக்கை.
Budget 2022: மாத சம்பளம் வாங்குவோரின் முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? நிறைவேற்றுமா அரசு? title=

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2022-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து பொதுமக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. 

மாத சம்பளம் வாங்குவோரின் கோரிக்கை

சம்பள வகுப்பினரிடையே (Salaried Class), வருமான வரி வரம்புகளில் (Income Tax Slab) மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது. வருமான வரி சட்டத்தின் பிரிவுகளான பிரிவு 80C, 80EE, 80EEA மற்றும் 24(b)ஆகியவற்றின் கீழ் சலுகைகளை அதிகரிக்க வேண்டும் என்பதும் மற்றொரு முக்கிய கோரிக்கையாக உள்ளது. 

60 வயதுக்கு குறைவான தனிநபர்களுக்கான (resident or non-resident) தற்போதைய வரம்பு விவரங்கள் இதோ: 

தற்போதுள்ள வரி முறைமையில் உள்ள வருமான வரி வரம்பு தற்போதுள்ள வரி முறைமையில் உள்ள வருமான வரி விகிதம் புதிய வரி முறையில் உள்ள வருமான வரி வரம்பு புதிய வரி முறையில் உள்ள வருமான வரி விகிதம்
ரூ. 2,50,000 வரை Nil ரூ. 2,50,000 வரை Nil
ரூ.2,50,001 - ரூ.5,00,000 ரூ.2,50,000க்கு மேல் 5% ரூ.2,50,001 - ரூ.5,00,000 ரூ.2,50,000க்கு மேல் 5%
ரூ 5,00,001 - ரூ 10,00,000 ரூ. 12,500 + ரூ. 5,00,000க்கு மேல் 20% ரூ.5,00,001 - ரூ.7,50,000 ரூ. 12,500 + ரூ. 5,00,000க்கு மேல் 10%
10,00,000 ரூபாய்க்கு மேல் ரூ. 1,12,500 + ரூ. 10,00,000க்கு மேல் 30% ரூ.7,50,001 - ரூ.10,00,000 ரூ. 37,500 + ரூ. 7,50,000க்கு மேல் 15%
    ரூ.10,00,001 - ரூ.12,50,000 ரூ. 75,000 + ரூ. 10,00,000க்கு மேல் 20%
    ரூ.12,50,001 - ரூ.15,00,000 ரூ.1,25,000 + ரூ.12,50,000க்கு மேல் 25%
    15,00,000 ரூபாய்க்கு மேல் ரூ. 1,87,500 + ரூ. 15,00,000க்கு மேல் 30%

ALSO READ | Budget 2022: பெண்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுமா? எதிர்பார்ப்புகள் என்ன?

தனிநபர்களும் HUF-களும் தற்போதுள்ள வரி முறை (Tax Regime) அல்லது குறைந்த வரிவிகிதத்துடன் உள்ள புதிய வரி விதிப்பு முறையில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் (வருமான வரிச் சட்டத்தின் 115 BAC பிரிவின் கீழ்) என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய வரி முறையில் சலுகை விகிதங்களைத் தேர்வு செய்யும் வரி செலுத்துவோருக்கு, தற்போதுள்ள வரி முறைமையில் கிடைக்கும் சில விலக்குகள் மற்றும் கழிப்புகள் (80C, 80D,80TTB, HRA போன்றவை) கிடைக்காது. 

வரி கட்டமைப்பில் மாற்றங்கள்?

பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய்யப்படவுள்ள பட்ஜெட்டில், அடுத்த நிதியாண்டில் வரி செலுத்துவோருக்கு எந்த அளவிற்கு வரி விலக்கு கிடைக்கும் அல்லது வரிக் கட்டமைப்பில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பதை அரசு முடிவு செய்யக்கூடும். ஆனால், கடந்த பட்ஜெட்டில் எந்த வித புதிய வரியும் விதிக்கப்படவில்லை. 

ALSO READ | Budget 2022: சாமானியர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News