Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால் இதில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என கருதப்பட்டாலும், வாக்காளர்களை ஈர்க்க ஆளும் பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் இந்த பட்ஜெட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக, வெவ்வேறு பிரிவினரை தனித்தனியாக இலக்காக கொண்டு அவர்களை மகிழ்விக்கும் சில அறிவிப்புகளை நிதி அமைச்சர் இன்று தனது உரையில் வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகள்


தனது பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் சற்று முன், ஏழைகள் (Poor), பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு முக்கியமான முன்னுரிமை கிடைக்கும் என்று தெரிவித்தார். தங்கள் அரசாங்கம் செய்துள்ள அற்புதமான பணிகளுக்காக நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக தங்களை ஆட்சியமைக்க ஆசீர்வதிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 


"... நமது இளம் நாடு உயர்ந்த அபிலாஷைகளையும், அதன் நிகழ்காலத்து பெருமையையும், பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையையும் கொண்டுள்ளது. அதன் அற்புதமான பணியை அடிப்படையாகக் கொண்ட நமது அரசாங்கம் மீண்டும் ஒரு மகத்தான பெரும்பான்மையுடன் மக்களால் ஆசீர்வதிக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் கூறினார்.


பிரதமர் மோடி (PM Modi) தலைமையிலான மத்திய அரசு அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது என்று கூறிய நிதி அமைச்சர் கட்டமைப்பு சீர்திருத்தங்கள், மக்கள் சார்பு திட்டம் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகியவை இந்தியப் பொருளாதாரம் புதிய வீரியத்தைப் பெற உதவியது என்று தெரிவித்தார்.


இது பெண்களுக்கான அரசு: நிதி அமைச்சர்


இந்த அரசாங்கம் பெண்களின் (Women) நலன் மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்தும் அரசாங்கம் என கூறிய நிதி அமைச்சர், அதற்கான எடுத்துக்காட்டுகளையும் விளக்கினார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், முத்தலாக்கை குற்றமாக்கியது மற்றும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு சட்டமன்ற இடங்களை ஒதுக்கியது ஆகிய நடவடிக்கைகள் சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சியை முன்னேற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன என்று தெரிவித்தார். 


மேலும் படிக்க | Budget vs Women: பெண்களுக்கு மத்திய அரசு செய்தவை என்ன? நிதியமைச்சரின் பட்ஜெட் உரை!


ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்


இந்தியாவின் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான அரசின் முதன்மைத் திட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், திறன் இந்தியா இயக்கம் (Skill India mission) நாட்டிலுள்ள 1.4 கோடி இளைஞர்களுக்கு வெற்றிகரமாக பயிற்சி அளித்து அவர்களது திறன்களை மேம்படுத்தியுள்ளது என்றார்.


"வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நிலைநிறுத்தவும், உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை எளிதாக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும், ஆற்றல் முதலீடுகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றவும் வளங்களை உருவாக்குவதற்கு பங்களிக்கவும் எங்கள் அரசாங்கம் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றும்..." என்று நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.


விக்சித் பாரத்


'விக்சித் பாரத்' பற்றி விளக்கிய நிதி அமைச்சர், இயற்கையுடன் இணக்கமான வளமான பாரதம், நவீன உள்கட்டமைப்பு மற்றும் அனைத்து குடிமக்கள் மற்றும் பிராந்தியங்களுக்கும் வாய்ப்புகளை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று கூறினார்.


மேலும் படிக்க | Budget 2024: நீல நிற புடவையில் நிர்மலா சீதாராமன்... உணர்த்துவது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ