வளர்ச்சியை வேகப்படுத்தும் விதத்தில் அமைந்த பட்ஜெட்: மோடி!!
இந்தியர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக இந்த பட்ஜெட் இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இதுபற்றி அவர் நிகழ்த்திய உரையில், நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும் விதமாக இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. இந்த பட்ஜெட், புதிய இந்தியாவை வலுப்படுத்தும் விதமாக உள்ளது. விவசாயிகளின் அச்சம் போக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறையினருக்கும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களுக்கான புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழைகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட உள்ளது என்றார்.