Lok Sabha Election 2024: காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, பாரத் ஜோடா நீதி யாத்திரை என்ற பெயரில் தொடர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் தற்போது உத்தர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் நகரில் இன்று இந்த யாத்திரை நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில், ராகுல் காந்தியுடன், அவரது சகோதரியும், காங்கிரஸின் முன்னணி தலைவருமான பிரியங்கா காந்தி வதோராவும் பங்கேற்றார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இந்த நடைபயணத்தில் மக்களிடம் பேசியபோது, உத்தரபிரதேசத்தை ஆளும் பாஜக அரசை பல விஷயங்களில் கடுமையாக சாடினர். குறிப்பாக, சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு மறுப்பது, உத்தர பிரதேச கான்ஸ்டபிள் தேர்வின் வினாத்தாள் லீக்கான பிரச்னை ஆகியவை குறித்தும் கடும் குற்றச்சாட்டை இருவரும் முன்வைத்தனர்.


தேர்தலுக்கு பின்...


யாத்திரையில் ராகுல் காந்தி பேசியபோது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசையும் கடுமையாக சாடினார். அவர் கூறுகையில்,"பெரும்பான்மையான மக்களுக்கு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது கோரிக்கையாக உள்ளது. எனவே, தேர்தலுக்கு பின் முதல் நடவடிக்கையே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான்" என்றார். 


மேலும் படிக்க | காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி உறுதி! டெல்லியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?


மேலும், "இந்த நாட்டில் 50% பிறப்படுத்தப்பட்டோர், 15% சிறுபான்மையினர், 15% தலித்துகள், 8% ஆதிவாசிகள். இவை எத்தனை ஊடகங்களிடம் வெளிவந்திருக்கிறது, வந்ததே இல்லை. 100 நாள் வேலை திட்டத்தில் இவர்களின் பெயர்களை உங்களால் பார்க்க முடியு், ஆனால், பெரிய நிறுவனத்தில் நீங்கள் அவர்களை பார்க்க முடியாது. 90% மக்களுக்கு போட்டிப்போடவே வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை
" என்றார். 


பிரதமர் மோடியின் அரசியல் யுக்தி குறித்தும் ராகுல் காந்தி தாக்கி பேசினார், "மோடியின் ஆட்சியில் இந்தியர்களை திசைத்திருப்ப பாலிவுட், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, வேலையில்லா திண்டாட்டம், தேர்வின் வினாத்தாள் லீக், மக்கள் நல் சார்ந்த பல முக்கிய விஷயங்கள் கைக்கழுவ படுகினஅறன. இதுதான் பாஜகவின் அமைப்பாகும். தேசபக்தர்கள் நாட்டை ஒற்றுமையாக்க வேண்டும், அதனை பிரிக்க நினைக்கக் கூடாது" என்றார். 


வளர்ச்சிக்கு காங்கிரஸ்


பிரியங்கா காந்தியும் தன் பங்கிற்கு பாஜக அரசை கடுமையாக சாடினார். அவர் கூறுகையில்,"மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது. போதுமான வசதியின்மை, வினாத்தாள் லீக் ஆவது ஆகியவை வேலைவாய்ப்பின்மைக்கு முக்கிய காரணம். வேலைவாய்ப்பு என்பதே வளர்ச்சிக்கான ஆயுதமாகும். இங்குள்ள பித்தளை தொழில் தேக்கமடைந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு பிறகு எந்த வளர்ச்சியும் உத்தர பிரதேசத்தில் இல்லை" என்றார். 


முன்னதாக, உத்தர பிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுகள் மறுதேர்வுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வின் வினாத்தாள்கள் லீக்கானது என தெரிவிக்ப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பிரியங்கா காந்தி பேசுகையில், “28 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர் ஆனால் வினாத்தாள் கசிந்துவிட்டது" என்றார். இது போன்ற வினாத்தாள் லீக்குகள் இருக்கும்வரை வளர்ச்சி இருக்காது. வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.  


மேலும் படிக்க | முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் ரத்து! அதிரடி நடவடிக்கை எடுத்த அசாம் அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ