காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி உறுதி! டெல்லியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

டெல்லி, குஜராத், ஹரியானா, சண்டிகர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்துள்ளன.  

Written by - RK Spark | Last Updated : Feb 24, 2024, 12:26 PM IST
  • தொகுதி பங்கீடை அறிவித்த காங்கிரஸ் - ஆம் ஆத்மி.
  • டெல்லியில் 3 இடங்களில் காங்கிரஸ் போட்டி.
  • 4 இடங்களில் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது.
காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி உறுதி! டெல்லியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்? title=

மக்களவை தேர்தலுக்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தேசிய கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சு வார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை திட்டமிட்டு வருகின்றனர்.  அனைத்து மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதத்தில் தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுக்கான தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும். இந்நிலையில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையான கூட்டணி பற்றிய விவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு! அரசு வேலை அறிவித்த பஞ்சாப் முதல்வர்

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் தங்களது தொகுதி பங்கீடு குறித்து இன்று அறிவித்துள்ளன.  டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் நான்கு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், மூன்று இடங்களில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிட உள்ளது. இது இந்தியா கூட்டணியில் உருவாகி உள்ள தொகுதி பங்கீடு ஆகும்.  வடகிழக்கு, சாந்தினி சௌக், வடமேற்கு ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியும்,  புது டெல்லி, கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி ஆகிய இடங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளன.  மேலும், குஜராத்தில் உள்ள பரூச் மற்றும் பாவ்நகர் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட உள்ளது.  இந்த தொகுதி பங்கீட்டில் சண்டிகர் மற்றும் தெற்கு கோவா மக்களவை தொகுதிகளை ஆம் ஆத்மி காங்கிரஸ் கொடுத்துள்ளது.

உத்திர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை முடிவடைந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியுடனான காங்கிரசின் பேச்சு வார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஐந்து மாநிலங்களில் தங்களது தொகுதிகளை இறுதி செய்துள்ளன.  பஞ்சாபில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட உள்ளனர்.  டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் 2014 மற்றும் 2019 தேர்தலில் பாஜக வென்று உள்ளது. 2019ம் ஆண்டு கிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி, புது டெல்லி, வடகிழக்கு டெல்லி மற்றும் சாந்தினி சௌக் ஆகிய ஐந்து இடங்களில் காங்கிரஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மேலும் ஆம் ஆத்மி கட்சி வடமேற்கு டெல்லி மற்றும் தெற்கு டெல்லி ஆகிய இரண்டு இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

குஜராத்தில் காங்கிரஸ் 24 இடங்களிலும், ஆம் ஆத்மி 2 இடங்களிலும் போட்டியிட உள்ளது.  ஹரியானாவில் காங்கிரஸ் 9 இடங்களிலும், ஆம் ஆத்மி 1 இடத்திலும் போட்டியிட உள்ளது.  வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணி உருவானது குறிப்பிடத்தக்கது.  இந்த கூட்டணியில் இருந்து தற்போது பல கட்சிகள் பிரிந்துள்ள நிலையில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி தொகுதி பங்கீடை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | India Alliance: கெஜ்ரிவால், அகிலேஷ்க்கு பிறகு, மம்தாவுடன் பேசும் காங்கிரஸ், கழுகு பார்வையில் பாஜக!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News