கர்நாடகாவின் கசவனஹள்ளி சாராபூர் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


இடிபாடுகளில் இருந்து இதுவரை 6 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 



இந்த விபத்திற்கான காரணம் இது வரை தெரியவில்லை. மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.