கொரோனா பரவுதலை கட்டுப்படத்த நெரிசலான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சீல் வைக்க மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 15 நாட்களில் COVID-19 தொற்றுகளின் எண்ணிக்கை இப்பகுதிகளில் இருந்து மிகவும் அதிகமாக வருவதைக் கருத்தில் கொண்டு வடக்கு மும்பையின் நெரிசலான பகுதிகள் மற்றும் சேரிகளில் உள்ள கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மும்பை காவல்துறை ஆணையர் பரம் பிர் சிங் தெரிவிதுள்ளார்.


READ | COVID-19 ஊரடங்கால் மும்பையில் குற்ற விகிதம் வெகுவாக குறைந்தது...


அரசு புள்ளிவிவரங்கள் படி தஹிசார், போரிவாலி, மலாட், சார்கோப் மற்றும் கண்டிவாலி பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மும்பையில் கடந்த 15 நாட்களில் கொரோனா தொற்றுக்கள் மிகவும் அதிக அளவில் வந்துள்ளதாக தெரிகிறது.


இந்நிலையில் தற்போது வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் பிரஹன் மும்பை மாநகராட்சி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு சீல் வைக்க மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது.


சேரிகளிலும், அதிக அடர்த்தியான இடங்களிலும் அமைந்துள்ள கட்டிடங்களில் இருந்து பல வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் இதுபோன்ற கட்டமைப்புகளை காவல்துறையினர் சீல் வைத்து வருவதாகவும், இந்த நடவடிக்கைகளின் முடிவுகள் அடுத்த சில நாட்களில் காணப்படுகின்றன என்றும் மும்பை காவல்துறை ஆணையர் பரம் பிர் சிங் தெரிவிதுள்ளார்.


நகரத்தில் தற்போது 750 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன, அவற்றில் 300 வடக்கு மும்பையில் மட்டும் உள்ளன என்று சிங் கூறுகிறார்.


READ | வேலை இல்லையா? கவலை வேண்டாம்; மணிக்கு ₹140 வரை சம்பாதிக்க ஒரு அரிய வாய்ப்பு!


இது தவிர, 27 ஹாட்ஸ்பாட்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர், மேலும் இந்த பகுதிகளில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


பரவலின் சங்கிலியை உடைக்க மக்கள் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் மற்றும் முகமூடிகளை அணிய வேண்டும், ஏதேனும் அவசர வேலைக்கும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினால் சானிடிசர்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சிங் தெரிவித்துள்ளார்.