உத்தரப்பிரதேசத்தில் சமூக விரோத சக்திகள் நடத்திய வன்முறையில் காவலர் உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டதில் 4 பேர் கைது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் புலாண்ட்ஷர் அருகே புலந்தர் சஹர் என்ற நகரில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியை முற்றுகையிட்ட பசு காவலர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதைத் தடுக்க முயன்ற போலீஸ்காரர் சுபோத் சிங் வன்முறையாளர்களின் கல்வீச்சால் படுகாயம் அடைந்த நிலையில் அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து சுட்டதால் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமித் குமார் என்பவர் குண்டடி பட்டு உயிரிழந்தார்.


அதுபோல், போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒரு வாலிபர் குண்டு காயம் அடைந்து பலியானார். அவர் பெயர் சுமித் (வயது 20) என்று தெரிய வந்தது. சம்பவத்தை தொடர்ந்து, உயர் காவல்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். 4 பேர் பலியானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போலீஸ் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


வன்முறை ஏன் ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறை அதிகாரி சுபோத் குமாரை தனியாக விட்டு ஏனைய காவலர் சென்றது ஏன்? என்பது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக மீரட் பகுதி ADP பிரஷான்ந்த் குமார் தெரிவித்தார். மேலும், புலாண்ட்ஷர் வன்முறை தொடர்பாக 27 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பெயர் குறிப்பிடாமல் அடையாளம் தெரியாத 60 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.


இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பதான்கோட் நெடுஞ்சாலையில் மாடுகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் லாரியை வழிமறித்த வன்முறைக் கும்பல் ஒன்று லாரிக்கு தீவைத்த போது கவால்துரையினர் தடியடி நடத்தினர்.