போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் சித்தியில் பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவின் வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. முன்னதாக, பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சித்தி மாவட்டத்தில் ஏழை பழங்குடியின ஒப்பந்தத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லாவின் நிலத்தில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடத்தை மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு இடித்துத் தள்ளியது.


பிரவேஷ் சுக்லாவின் செயல் தொடர்பாக எழுந்த பொதுமக்களின் சீற்றம் மற்றும் பெரும் எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்தியில் இன்று, அவரது சட்டவிரோத கட்டுமானமான வீடு இடிக்கப்பட்டது. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட வீடியோவில், பிரவேஷ் சுக்லா மற்றும் அவரது குடும்பத்தினர் மிகப்பெரிய சட்டவிரோத ஆக்கிரமிப்பை மத்திய பிரதேச நிர்வாகத்தினர் இடித்தனர்.



புல்டோசர் கொண்டு வீடு இடிக்கப்பட்டபோது, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறுநீர் கழித்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கோரிய நிலையில், சுக்லா மீது என்எஸ்ஏவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | உங்களுக்கு 83 வயதாகிறது... இனி ரெஸ்ட் எடுங்க... சரத் பவாரை கிண்டல் செய்யும் அஜித் பவார்!


சிகரெட்டை பிடித்துக்கொண்டிருந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர், தரையில் அமர்ந்திருந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது.  


சில நாட்களுக்கு முன்பே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், பயத்தினால் புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. தற்போது, இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில், அரெஸ்ட் பிரவேஷ் சுக்லா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. 


இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழுவை பாரதிய ஜனதா கட்சி அமைத்துள்ளதாக மாநில கட்சி தலைவர் வி டி சர்மா தெரிவித்துள்ளார். இந்தக் குழுவிற்கு ஜஞ்சட்டி விகாஸ் பிரதிகரன் தலைவர் ராம்லால் ரவுடல் தலைமை தாங்குகிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஷரத் கோல் மற்றும் அமர் சிங் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் காந்த்தேவ் சிங் ஆகியோர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.


மேலும் படிக்க | 15 ரூபாயில் பெட்ரோல்... ஆனால் அதற்கு இதை செய்யனும் - மத்திய அமைச்சர் சொல்லும் சீக்ரெட்


இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள்), 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவமதிப்பு), மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் பிரிவுகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் நடவடிக்கையும் தொடங்கப்பட்டது, 


குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவுடன் தொடர்புடையவர் என்று காங்கிரஸ் கூறியது, ஆனால் ஆளும் கட்சி அந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, அந்த மனிதனின் செயல் "கொடூரமானது, கண்டனத்திற்குரியது மற்றும் மனிதகுலத்திற்கு அவமானம்" என்று குறிப்பிட்டார்.


புல்டோசர் நடவடிக்கைக்கு மாயாவதி கோரிக்கை


பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி புதன்கிழமை வெளியிட்ட ட்விட்டரில், “மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினர்/தலித் இளைஞர்கள் மீது உள்ளூர் ‘தபாங்’ தலைவர் சிறுநீர் கழித்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது.” “அரசாங்கம் விழித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தின் வீடியோ வைரலான பிறகு, இது அவர்களின் ஈடுபாட்டைக் காட்டுகிறது," என்று அவர் கூறினார்.


மேலும் படிக்க | பாம் வைக்க ரோபோடிக்ஸ் படிப்பு... ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கர்நாடகாவில் சதித்திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ