பூண்டி பஸ் விபத்து: தந்தை, மகன், மாமா, தாதா... 24 பேரின் சடலம் ஒன்றாக எரிந்தது; அனைவரின் கண்களிலும் ஈரம்
21 பேரின் உடல் ஒன்றாக தகனம் செய்யப்பட்டன. அங்கு இருந்தவர்களின் அழுக்குரல் கேட்டு அனைவரையும் மிகவும் வேதனை அடையச்செய்தது.
கோட்டா: ராஜஸ்தானில் பூண்டி பஸ் விபத்தில் பலியான 24 பேரின் சடலங்கள் கோட்டாவின் ஜவஹர் நகருக்கு கொண்டு செல்லப்பட்டவுடன், அங்கு இருந்தவர்களின் அழுக்குரல் கேட்டு அனைவரையும் மிகவும் வேதனை அடையச்செய்தது. அந்த பகுதி முழுவதும் பெரும் சோகம் ஏற்பட்டிருந்தது. அந்த பகுதியை 9 ஆம்புலன்ஸ் அடைந்த போது, குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் துக்கத்தால் அழுத காட்சி அனைவரின் கண்களை ஈரமாகிவிட்டன. இந்த விபத்தில் இறந்தவர்களில் 21 பேர் உறவினர்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாக தகனம் செய்யப்பட்டனர். இந்த விபத்து குறித்த தகவல்களை அறிந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் கோட்டாவுக்கு சென்றார். பல இறுதி சடங்குகள் ஒன்றாக எரிவதைக் கண்ட ஓம் பிர்லாவின் கண்களிலும் கண்ணீர் துளி வெளிப்பட்டது.
21 பேரின் இறுதி சடங்குகள் கிஷோர்புரா முக்திதத்தில் நடந்தது. விபத்தில் இறந்தவர்களில், கணவன், மனைவி மற்றும் அவர்களது குழந்தைகள் என இரண்டு குடும்பங்களை சேர்ந்த அனைவரும் விபத்தில் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில், அசோக் மற்றும் நரேஷ் ஆகிய இரு சகோதரர்களின் குடும்பத்தினர் குழந்தைகளின் தேர்வு காரணமாக விழா நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. அதனால் அவரது குடும்பத்தினர் விபத்தில் இருந்து தப்பினர், ஆனால் விழாவுக்கு சென்ற அவரது இரண்டு சகோதரிகள் இறந்தனர். இந்த இருவரும் திருமணம் ஆகிவிட்டது. இறந்தவர்களில் பெரும்பாலோர் உறவினர்கள் மற்றும் கோட்டாவில் தனித்தனியாக வசித்து வந்தனர். 21 இறந்த உடல்களும் இங்கு கொண்டு வரப்பட்டு இறுதி பயணம் மேற்கொள்ளப்பட்டது.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் விபத்து குறித்த தகவல்களைப் பெற்ற பின்னர் கோட்டாவை அடைந்தார். மக்களவை சபாநாயகர் விமான நிலையத்திலிருந்து நேரடியாக கிஷோபுரா முக்திதத்தை அடைந்து இறுதி சடங்கில் கலந்து கொண்டார். ஒரே நேரத்தில் பல இறுதி சடங்குகள் எரிவதைக் கண்டு, மக்களவை சபாநாயகரின் கண்களும் ஈரமாகிவிட்டன.
புதன்கிழமை சுமார் 28 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோட்டாவிலிருந்து சவாய்மதோபூருக்கு பஸ் சென்றது. பண்டி மாவட்டத்தின் லாகேரியில் உள்ள பாப்பாடி கிராமத்திற்கு அருகிலுள்ள பாலத்தின் மீது காலை 10 மணியளவில் பஸ் சென்றுக்கொண்டு இருக்கும் போது பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால், பஸ் மாகே ஆற்றில் விழுந்தது. 13 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 11 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு இறந்தனர்.
மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் நிவாரண மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தை அடைந்து, அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ .2 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.