கருத்துகணிப்பு முடிவுகள் பாஜக-விற்கு சாதகமாய் வெளியாகியுள்ள நிலையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா விருந்து அளிக்கின்றார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய மக்களவைக்காக 543 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நிறைவு பெற்றுள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்தல், மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. 


மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினர் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்படுகிறது.


எனினும் தமிழத்தை பொருத்தவரையில் தான் கூட்டணி அமைத்துள்ள அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு தமிழகத்தில் 6 இடங்கள் வரையே கிடைக்கும் என தேர்தலுக்கு பிந்திய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. 
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா சார்பில் இன்று விருந்து அளிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 


புதுடெல்லி The Ashok ஹோட்டலில் நடைபெறும் இந்த விருந்தில் பிஹார் முதல்வரும் ஜனதா தல் தலைவருமான நிதிஷ் குமார், சிவ சேன தலைவர் உத்தவு தாக்கரே, லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பவன், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி உள்ளிட்டோர் பலரும் பங்கேற்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதற்கிடையில் பாஜக-விற்கு எதிரான பலம் வாய்ந்த கூட்டணி ஒன்றை உருவாக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான குழு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் மயாவதி ஆகியோரை அவர் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் பாஜக-வின் பிரதாண எதிர்கட்சியான காங்கிரஸ் வாக்கு எண்ணிக்கை நாள் அன்று எதிர்கட்சிகள் தலைவர்கள் அனைவரையும் அழைத்து விருந்தளிக்க காத்திருக்கின்றது.


குறிக்கப்பட்ட இந்த நிகழ்வுகள் மூலம் வரும் மே 23-ஆம் தேதி மக்கள் எதிர்பாராத பல விசித்திர நிகழ்வுகள், சினிமா காட்சிகளை மிஞ்சும் உணர்வுபூர்வ காட்சிகளைசெய்தி ஊடங்கங்கள் வாயிலாக கண்டு ரசிக்கவுள்ளனர் என்பதில் எந்த ஐயமும் இல்லை...