தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்த மாநில அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.7ல் இருந்து ரூ.8ஆக உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேருந்து கட்டண உயர்வு மார்ச் 1 முதல் அமலுக்கு வருவதாக கேரளா அரசு தெரிவித்துள்ளது.மந்திரிசபை  முடிவுகளின் படி சதாரண பஸ்களில் கிலோமீட்டருக்கு 64 பைசாவில் இருந்து 70 பைசாவாக உயருகிறது.


சூப்பர் எக்ஸ்பிரஸ் சேவைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம்ரூ. 20 இல் இருந்து  ரூ. 22 ஆக உயர்ந்து உள்ளது. சூப்பர் டீலகஸ்  ரூ 30 ஆகவும், ஹைடெக் ஆடம்பர ஏசி ரூ.44 ஆகவும் வால்வோ ரூ45 ஆகவும் உயர்ந்து உள்ளது.


ஆனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ. 10 உயர்த்த கோரிக்கை  வைத்து உள்ளனர்.