புதுடெல்லி: நாகாலாந்து மாநிலம், திமாப்பூருக்கு தனி ஜெட் விமானத்தில் ரூ.3.5 கோடி மதிப்பான பழைய ரூபாய் நோட்டுகளுடன் வந்த தொழிலதிபரரை போலீஸாரால் கைது செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சிர்சா நகரிலிருந்து தனி விமானத்தில் திமாப்பூர் விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்தார். 


அவரது உடைமைகளை மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை அவர் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.