டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் கடைகள், வணிக வளாகங்கள், வங்கிகள், திரையரங்குகள் ஆகியவை இனி 24 மணி நேரமும் இயங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் இந்த புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இனி 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கும் வகையில் புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற முடியும். குறிப்பாக பெண்களும் இரவு நேரங்களில் பணிபுரிய வழிவகை ஏற்படுத்தபட்டுள்ளது.


இந்த புதிய சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதால், இந்த சட்டம் நேரடியாக அமலுக்கு வர உள்ளது. அதன் அடிப்படையில் ஆண்டு முழுவதும் அனைத்து நேரங்களிலும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை செயல்படும். இந்த திட்டம் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் சார்பில் இந்த நவீன சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 


இந்த நவீன சட்டம் நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.