கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில், ரூ.7,774 கோடியை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள தொகையை 1 -4 வருடங்களுக்கு பயன்படுத்தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


 நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் ஒருபகுதியாக, இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிக்கு ரூ.15,000 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


இது அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று தவணைகளாக விடுவிக்கப்படும் என்றும் இதில், ரூ.7,774 கோடி தொகையை உடனடியாக விடுவிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கரோனா தடுப்புப் பணிகளில் முகக்கவசம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான உபகரணங்கள் உள்பட கொரோனா தடுப்புப் பணிக்குத் தேவையானவை அனைத்தும் இதன்மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முதலில் ரூ.7,774 கோடியை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்பதல் வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையை 1-4 வருடங்களுக்கு பயன்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதியானது கொரோனா தடுப்பு பணிகளில் முகக்கவசம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.