மாநில அரசுகள் தங்களின் நலத்திட்டங்களுக்காக ஆதார் அட்டையை ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது போன்ற முக்கிய திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் எண் என்னை நாம் பயன்படுத்தி வருகிறோம். 


மாநில அரசு மானியம் வழங்கவும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் பயனாளிகளை ஆதார் மூலமாக தேர்ந்தெடுக்க இச்சட்டம் வகை செய்கிறது. பயோமெட்ரிக் அடையாளம் பொருந்திய ஆதார் அட்டைகளால் முறைகேடுகளுக்கு வாய்ப்பு இல்லை என்பதுடன் அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாக மக்களை சென்றடைய இது வழிவகுக்கும்.


உச்சநீதிமன்ற உத்தரவின்படி பயனாளிகள் தாங்களாகவே ஆதாரை பயன்படுத்திகொள்ள அனுமதிக்கலாம் என்று விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இப்போது மத்திய அரசின் மானியத் தொகை ஆதார் மூலமாக பயனாளிகளுக்கு வழங்கப்படுவதைப் போல், மாநில அரசும் பயனாளிகளுக்கு மானியம் வழங்க இனி ஆதாரைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்று விளக்கம் அளித்தார்.


சிம்கார்டுகள். வங்கிக்கணக்குகள் போன்றவற்றுக்காக ஆதார் அட்டையின் 12 எண் குறியீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சட்டத்தை திருத்தியமைத்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.