* கேரளாவை சேர்த்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணந்தனம் ஜே. அல்போன்ஸ் அமைச்சராக பதவி ஏற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


* சத்யா பால் சிங் அவர்கள் அமைச்சராக பதவி ஏற்றார்.


 



 


* கஜேந்திர சிங் ஷெகாவத் அமைச்சராக பதவியேற்றார்.


 



 


* ஹர்தீப் சிங் பூரி அமைச்சராக பதவி ஏற்றார்.


 



 


* ராஜ் குமார் சிங் பதவி ஏற்றார்.


 



 


* அனந்தகுமார் ஹெகடே அமைச்சராக பதவி ஏற்றார்.


 



 


* விரேந்திர குமார் அமைச்சராக பதவி ஏற்றார்.


 



 


* அஸ்வினி குமார் சௌபே அமைச்சர் பதவியேற்றார்.


 



 


* ஷிவ் பிரதாப் சுக்லா பதவி ஏற்றார்.


 



 


* மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பதவி ஏற்றார்.


 



 


* நிர்மலா சீதாராமன் கேபினட் பதவிக்கு உயர்த்தப்பட்டார், உறுதிமொழி எடுத்துள்ளார்.


 



 


* மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கேபினட் அமைச்சராக பதவி ஏற்றார்.


 



 


* தர்மேந்திர பிரதான் கேபினட் அமைச்சராக பதவியேற்றார்.


 



 


புதிய மத்திய அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்று வருகின்றனர்.


குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பிரதமர் மோடி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.


மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று விரிவாக்கம் செய்யவுள்ளார். இந்த விரிவாக்கத்தின்போது, 9 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.


மத்திய அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் 9 பேர் பதவியேற்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இன்று மாற்றி அமைக்கப்பட உள்ள அமைச்சரவையில் 9 பேர் புதிதாக சேர்க்கப்பட உள்ளனர். இவர்கள் 9 பேருக்கும் காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். 


இவர்கள் 9 பேரும், பதவியேற்க செல்வதற்கு முன் பிரதமர் மோடியையும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவையும் இன்று காலை சந்தித்து பேசி உள்ளனர். 


நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தர் அபாஸ் நஹ்வி ஆகிய 4 பேரும் மத்திய இணையமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சர்களாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. 


சத்ய பால் சிங், ஹர்தீப் புரி, கே.ஜெ.அல்போன்ஸ், ஆர்.கே.சிங் உள்ளிட்டோர் புதிதாக இணையமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பதவியேற்பு விழா முடிந்ததும், பிரதமர் மோடி விருந்தளிக்க உள்ளார்.