இந்தியாவில் அதிகரித்து வரும் சிசேரியன் பிரசவங்கள்
இந்தியாவில் சிசேரியன் முறையில் நடக்கும் பிரசவங்கள் அதிகரித்து வருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) சிசேரியன்களின் அளவு 10-15 சதவீதம் தான் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. சிசேரியன்களின் எண்ணிக்கை மிகவும் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந்தியாவில் தெலங்கானவில் 58 சதவிகிதமாகவும், தமிழ்நாட்டில் 34.1 சதவிகிதமாக சிசேரியன்கள் நடப்பதாக தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகள், பணத்துக்காக சிசேரியன் முறையைக் கையாள்கின்றன. சிசேரியன் செய்யும் மருத்துவர் பெயரையும் மருத்துவமனைகள் வெளியிட வேண்டும். எவ்வளவு சிசேரியன் நடந்தது என்ற தகவலையும் மருத்துவமனைகள் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்தியாவில் சிசேரியன் அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும் எனவும் மும்பையைச் சேர்ந்த சுபர்ணா கோஷ் என்பவர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தியிடம் வலியுறுத்தியுள்ளார்.