நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் முதல்வர் ஆகமுடியும், ஆனால் எனக்கு அதில் எவ்வித ஆர்வம் இல்லை என, செய்தியாளர் சந்திப்பின் போது நடிகை ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


இந்தி நடிகை ஹேமமாலினி உத்தரபிரதேச மாநில மதுரா தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாராவில் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் முதல்வர் ஆவீர்களா? என கேள்வி எழுப்பட்டது. 


அதற்கு பதில் அளித்த அவர், நான் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் முதல்வர் ஆகமுடியும் ஆனால் அதனை நான் விரும்பவில்லை, என்னுடைய சுதந்திரத்திற்கு முடிவாக அமையும் என கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், “மதுரா எம்.பி.யாக பதவியேற்று கடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வந்தேன். இங்குள்ள ப்ரிஜ்வாசி மக்களின் வளர்சிக்காக பாடுபடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்று தெரிவித்தார்


பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்காக அரும்பாடுபட்டு வருகிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை அறிமுகம் செய்து வைத்து உள்ளர். என தெரிவித்து உள்ளார்.