எதையும் முன்பே கணிக்க முடியாது; முடிவை வாக்காளர்களிடம் விடுகிறேன்: ராஜ்நாத் சிங்!
எதையும் தற்போது கணிக்க இயலாது. முடிவை லக்னோ தொகுதி வாக்காளர்களிடம் விடுகிறேன் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!!
எதையும் தற்போது கணிக்க இயலாது. முடிவை லக்னோ தொகுதி வாக்காளர்களிடம் விடுகிறேன் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்!!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், மத்தியப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் தலா 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், காஷ்மீரில் 2 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய மந்திரியும் லக்னோ தொகுதி பாஜக வேட்பாளருமான ராஜ்நாத் சிங், லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், வெற்றிவாய்ப்பு குறித்து கேட்டபோது, ‘எதையும் இப்போது கணிக்க இயலாது. முடிவை லக்னோ தொகுதி வாக்காளர்களிடம் விடுகிறேன்’ என கூறினார்.
‘மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவரை தேர்வு செய்வதற்கு முழு உரிமை உள்ளது. எது எப்படி இருந்தாலும், மோடி மீண்டும் பிரதமர் ஆவார்’ என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சத்ருகன் சின்காவின் மனைவி பூனம் சின்கா போட்டியிடுகிறார்.