புதுடெல்லி:  தற்போது சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷப்னம் வழக்கு பற்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் மதுரா சிறையில் ஷப்னம் என்ற பெண் தூக்கிலிடப்பட உள்ளார். ஆனால், தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தேதி மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷப்னம் தனது காதலர் சலீமுடன் சேர்ந்து தனது சொந்த வீட்டில், உறவினர் 7 பேரை வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக தற்போது ராம்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஷப்னம் வழக்கு விபரங்களுடன், தூக்கு தண்டனைக்கு சற்று முன் குற்றவாளியின் காதில் தூக்கிலிடுபவர் என்ன சொல்கிறார் என்பதை இன்று அறிந்து கொள்ளலாம்.


தூக்கில் போடுவதற்கு முன் நடப்பது என்ன


எந்தவொரு குற்றவாளியையும் தூக்கிலிடுவதற்கு முன், மரணதண்டனை கைதியின் எடைக்கு சமமான அளவிலான உருவத்தை தொங்கவிட்டு பரிசோதனை நடத்தப்படும். கைதியை கடைசியாக எப்போது சந்திக்கலாம் என்று 15 நாட்களுக்கு முன்னதாகவே குற்றவாளியின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரணதண்டனை கைதியிடம் கூறப்படும் கடைசி வார்த்தை


மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று முன்பு, மரணதண்டனையை நிறைவேற்றுபவர் குற்றவாளியிடம் சென்று "என்னை மன்னியுங்கள், நான் ஒரு அரசாங்க ஊழியர், நான் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இதனை செய்கிறேன். நான் ஒரு சூழ்நிலைக் கைதி" என்று அவரது காதில் கூறுகிறார். இதற்குப் பிறகு, குற்றவாளி இந்துவாக இருந்தால், மரணதண்டனை நிறைவேற்றுபவர், அவரது காதில் ராம்-ராம் என்று கூறுகிறார். அதே சமயம் குற்றவாளி  இஸ்லாமியராக இருந்தால், கடைசியாக 'சலாம்’ எனக் கூறுகிறார்.


மேலும் படிக்க | சூடான பானிபூரி குழம்பில் விழுந்து 2 வயது குழந்தை பலி!


பின்னர், குற்றவாளியின் உயிர் போகும் வரை தூக்கிலிடுபவர் நெம்புகோலை இழுத்து அவரை தூக்கில் தொங்கவிடுகிறார். அதன் பிறகு, குற்றவாளியின் நாடித் துடிப்பை மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள். இறப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, தேவையான நடவடிக்கைகள் முடிந்து, பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.


தூக்கில் போடும் நாளில் என்ன நடக்கும்?


- தூக்கிலிடப்படும் நாளில், கைதியை அதிகாலையிலே குளித்த பிறகு, அவருக்கு புதிய ஆடைகள் வழங்கப்படும்.


- அதிகாலையில், சிறைக் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில், காவலர்கள் கைதியை தூக்கிலிடும் அறைக்கு அழைத்து வருகிறார்கள்.


- தூக்கு தண்டனை நிறைவேற்றுபவரை தவிர, மூன்று அதிகாரிகள் தூக்கிலிடப்படும் நேரத்தில் அங்கு இருப்பார்கள்.


- இந்த மூன்று அதிகாரிகள் சிறை கண்காணிப்பாளர், மருத்துவ அதிகாரி மற்றும் மாஜிஸ்திரேட் ஆவர்.


- மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் கண்காணிப்பாளர் மாஜிஸ்திரேட்டிடம் கைதி அடையாளம் காணப்பட்டதாகவும், மரண உத்தரவு அவருக்கு வாசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.


- கைதிகள் மரண தண்டனையில் கையெழுத்திடுவார்கள்.


- தூக்கிலிடப்படுவதற்கு முன், கைதியிடம் அவரது கடைசி ஆசை கேட்கப்படும்.


- சிறை கையேட்டில் உள்ள வழிகளை பின்பற்றி கைதியின் ஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன.


- தூக்கிலிடப்படும் போது, ​​மரணதண்டனையை நிறைவேற்றுபவர் மட்டுமே குற்றவாளிகளுடன் இருக்கிறார்.


ஷப்னம் வழக்கு


உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பவன்கேடி கிராமத்தில் வசிக்கும் ஷப்னம், தனது காதலன் சலீமுடன் சேர்ந்து மொத்தம் 7 பேரை கொன்று குவித்துள்ளார். 14-15 ஏப்ரல் 2008 இரவு, அவர் தனது சொந்த வீட்டில் இந்த கொலைகளை செய்துள்ளார். அவர் தனது பெற்றோர், இரண்டு சகோதரர்கள், ஒரு மைத்துனர், அத்தையின் மகள் மற்றும் மருமகனை கோடரியால் வெட்டிக் கொன்றார். ஷப்னத்தால் கொல்லப்பட்ட அண்ணியும் கர்ப்பமாக இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில்  தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, ஷப்னத்தின் கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதால், அவர் விரைவில் தூக்கிலிடப்பட உள்ளார்.


மேலும் படிக்க | தூத்துக்குடி: அரை சவரன் நகைக்காக பெண் கொலை - பட்டப்பகலில் அரங்கேறிய பயங்கரம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR