உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் 45 நிமிட சந்திப்பு.. பாஜகவில் இணைகிறாரா கேப்டன்?

நவ்ஜோத் சிங் சித்துவுடனான கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். மேலும் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, நான் அவமானமாக உணர்கிறேன் என தனது அதிருப்தியை வெளிப்படியாக வெளிப்படுத்தி இருந்தார்.
புது டெல்லி: பஞ்சாபில் நடந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், காங்கிரஸ் மீது அதிருப்தியாக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் இன்று (புதன்கிழமை; செப்டம்பர் 29) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி வந்தார். அமித்ஷாவின் இல்லத்தில் நடந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. கேப்டன் அமரீந்தர் சிங் நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி வந்தடைந்தார். ஆனால் நேற்றில் இருந்து அவர் எந்தவொரு அரசியல் கட்சி தலைவரையும் சந்திக்க மறுத்தார். இதற்கிடையில், இன்று அவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். ஒருபுறம், நவ்ஜோத் சித்து மற்றும் அமைச்சர்களின் ராஜினாமா, மறுபுறம் கேப்டனின் இந்த சந்திப்பு பஞ்சாபில் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் மத்தியிலும் பூகம்பம் வெடித்துள்ளது.
நவ்ஜோத் சிங் சித்துவுடனான கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். மேலும் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, நான் அவமானமாக உணர்கிறேன் என தனது அதிருப்தியை வெளிப்படியாக வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் பிரதமர் மோடி இருவருக்குமான நட்பு என்பது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நட்பை விட நீண்ட பழைய நட்பகாக் கருதப்படுகிறது. தேசிய பிரச்சினைகளில் எந்தவித சமரசமும் இன்றி பல முறை பேசியுள்ளார். பாஜக தலைவர்கள் அவரை பல சமயங்களில் தேசியவாதி என்றும் அழைத்தனர். இத்தகைய சூழ்நிலையில், அவர் பாஜகவில் சேருவது பற்றிய ஊகங்கள் எழுந்துள்ளது.
ALSO READ | ஆபரேஷன் தாமரை? உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் கேப்டன் அமரீந்தர் சிங்
கடந்த பல மாதங்களாக பஞ்சாப் காங்கிரஸில் மோதல் வெடித்துள்ளது. ஒரு நீண்ட மோதலுக்குப் பிறகு, அதாவது அப்போதைய முதல்வர் அமரீந்தர் சிங்குடன் ஏற்பட்ட மோதலுக்கு மத்தியில் ஜூலை 18 அன்று காங்கிரஸின் பஞ்சாப் பிரிவு தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டார்.
சித்து ராஜினாமா குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை:
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா தொடர்பான கட்சியின் உயர்மட்ட தலைமை கோபத்தில் உள்ளது. இருப்பினும், சித்துவின் ராஜினாமா குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ALSO READ | பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்து
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR