புது டெல்லி: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் எதிர்காலம் குறித்த அக்கறையில் நான் சமரசம் செய்ய முடியாது என்று நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். நவ்ஜோத் சிங் சித்து கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி தனது ராஜினாமாவை அளித்துள்ளார். எனினும், அவர் காங்கிரசுக்காக தொடர்ந்து பணியாற்றுவார் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில், நவஜோத் சிங் சித்துவின் ஒப்புதலுடன், பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் நீக்கப்பட்டார் மற்றும் தலித் தலைவர் சரஞ்சித் சிங் சன்னி பஞ்சாப் சிம்மாசனத்தில் அமரத்துப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும் காங்கிரஸ் கட்சி மீது கோபத்தில் இருக்கும் கேப்டன் அமரீந்தர் சிங், இன்று டெல்லி செல்லும் அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார் என்ற தகவல்கள் வந்த நிலையில், நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ | ஆபரேஷன் தாமரை? உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் கேப்டன் அமரீந்தர் சிங்
அதுமட்டுமில்லாமல், ஊடக அறிக்கையின்படி, சித்துவுக்கும் சமீபத்தில் பஞ்சாப் மாநில முதல்வராக நியமிக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதாவது புதிய அமைச்சரவையில் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான முக்கிய முடிவுகளில் சித்துவின் இடையூறு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நவ்ஜோத் சிங் சித்துவுடனான சர்ச்சைக்கு இடையே கேப்டன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக நியமிக்கப்பட்டார். தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்திய கேப்டன் அமரீந்தர் சிங், பஞ்சாப் முதல்வராக சித்துவை நியமிக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR