பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக அம்ரிந்தர் சிங் இன்று பதவி ஏற்பு
பஞ்சாப் முதல்-மந்திரியாக அமரிந்தர் சிங் இன்று பதவி ஏற்கிறார்.
பஞ்சாப் முதல்-மந்திரியாக அமரிந்தர் சிங் பதவி ஏற்பது இது 2-வது முறை. ஏற்கனவே அவர் 2002-2007 காலகட்டத்தில் அங்கு முதல்-மந்திரி பதவி வகித்தார்.
சண்டிகாரில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று காலை அம்ரிந்தர் சிங் பதவி ஏற்கிறார். பஞ்சாப்பின் 26-வது முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் வி.பி.சிங் பத்னோரே பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார்.
இவ்விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு அமரிந்தர் சிங் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். எனவே பதவி ஏற்பு விழாவில் அவர் கலந்துகொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் முதல்வராக அம்ரிந்தர் சிங் இன்று பதவி ஏற்க உள்ளதால், 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.