பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு
உத்தரகாண்ட் மாநில சாம்பவாத் பகுதியில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகாண்ட் மாநில சாம்பவாத் பகுதியில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர்.
மலைப்பாதையில் சவாலா என்ற இடத்தில் வளைவில் திரும்பியபோது கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது. இதில் கார் முற்றிலும் நொறுங்கியதுடன் 8 பேர் உயிரிழந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.