ஒடிசா ரயில் விபத்து: கணவர் இறந்துவிட்டார்... நிவாரண தொகைக்காக பொய் சொன்ன மனைவி
Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில், அரசும், ரயில்வே துறையும் அறிவித்த மொத்தம் ரூ. 17 லட்ச இழப்பீட்டுத் தொகைக்காக, தன் கணவர் விபத்தில் மரணமடைந்துவிட்டதாக பொய் சொல்லிய பெண் மீது அவரின் கணவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Odisha Train Accident: ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள மணிபண்டாவைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. இவர் கடந்த ஜூன் 2ஆம் தேதி நடந்த ரயில் விபத்தில் தனது கணவர் பிஜய் தத்தா உயிரிழந்துவிட்டதாகவும், ஒரு உடலை தனது கணவருடையது என அடையாளம் காட்டியதாகவும் கூறியிருந்தார். ஆனால், ஆவணங்களைச் சரிபார்த்ததில், அவரது கோரிக்கை பொய்யானது என தெரியவந்தது.
போலீசார் எச்சரித்து அவரை விடுவித்த போதிலும், அவரது கணவர் பிஜய் தத்தா, மணியபந்த காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அந்த பெண்ணுக்கு பிரச்னை கிளம்பியுள்ளது. இதில், அந்த பெண் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அப்பெண் தற்போது தலைமறைவாகிவிட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பணத்தை அபகரிக்க முயன்றதற்காகவும், அவரது மரணத்தைப் பொய்யாக்குவதற்காகவும் கீதாஞ்சலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கணவர் பிஜாய் தத்தா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ரயில் விபத்து சம்பவம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகாவில் நடந்ததால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அந்த பெண்ணின் கணவரிடம் தெரிவிக்கப்பட்டது என மணிபந்தா காவல் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், தலைமைச் செயலாளர் பிகே ஜெனா, உடல்கள் மீது போலி உரிமை கோருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே மற்றும் ஒடிசா காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உயரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி ரூ. 2 லட்சம் இழப்பீடு அறிவித்தார். மேலும், ரயில்வே துறை சார்பில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
கடந்தஸ ஜூன் 2ஆம் தேதி அன்று இரவு 7 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. அதன் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டன. தொடர்ந்து, யஷ்வந்த்பூர் - ஹவுரா நோக்கி சென்ற ரயில், தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டிகளில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 278 பேர் இறந்தனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் நடந்த இடத்தில் தண்டவாளம் உள்ளிட்ட பழுதான அனைத்து வசதிகளும் உடனடியாக சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மீண்டும் அங்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த விபத்துக்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டதாக கூறிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அதுகுறித்த முழு அறிக்கையை விரைவில் வெளியிடவதாகவும் தெரிவித்தார். முன்னதாக, சம்பவ இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்... ஆனால் சில நிபந்தனைகள் உண்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ