முழு அடைப்பு விதிகள் மீறி கோயிலுக்கு சென்றதற்காக மகாராஷ்டிரா பாஜக MLA மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முழு அடைப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஒஸ்மானாபாத்தை சேர்ந்த பாஜக MLA சுஜித்சிங் தாக்கூர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள விதால் மற்றும் ருக்மிணி கோவிலில் பிரார்த்தனை செய்ய பாஜக தலைவர் பண்டார்பூரில் உள்ள கோவிலுக்கு சென்றதற்காக அவர் மீதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி ஏப்ரல் 4-ஆம் தேதி MLA தாக்கூர், சிலருடன் கோயிலுக்குச் சென்று தானே புகைப்படம் எடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் கோவில் வளாகத்தில் ஒரு குழந்தையுடன் குறைந்தது ஆறு பேரைக் காட்டுகின்றன. கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருக்கும் போது இந்த நிகழ்வு எவ்வாறு நடைப்பெற்றது என கேள்வியை எழுப்பியுள்ளது.


முழு அடைப்பின் போதிலும் கோயிலில் பூசாரிகள் தினசரி சடங்குகளை தொடர்ந்து செய்கிறார்கள் மற்றும் பிரார்த்தனைகள் ஆன்லைனில் ஒளிபரப்பப்படுகின்றன.


இந்நிலையில் முழு அடைப்பு விதிகளை மீறியதற்காக பாஜக MLA சுஜித்சிங் தாக்கூர் மீது IPC, பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


"மகாராஷ்டிராவில் நான்கு யாத்ரிகள் மிக முக்கியமானவை. அவற்றில் ஒன்று பண்டார்பூரில் உள்ள சைத்ய யாத்திரை மிகவும் முக்கியமானது" என்று தாகூர் கூறுகிறார், கோயில் அதிகாரிகளிடமிருந்து தனக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது என்று தாகூர் கூறுகிறார்.


"கோயிலில் கூட்டம் இல்லை என்பதை CCTV காட்சிகளில் காணலாம். மிகக் குறைவான நபர்கள் இருந்தனர், அதற்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பிற்குப் பிறகு மட்டுமே நான் சென்றிருந்தேன்," என்கிறார் தாகூர். முழு அடைப்பின் போது கோயிலுக்குச் செல்வதில் தவறில்லை என்று அவர் கருதுகிறார், மேலும் தனது செயல்பாட்டில் எந்த வதி விதி மீறலும் ஏற்படவில்லை என்று வலியுறுத்துகிறார் தாகூர்.


"கோயிலின் துணைப்பிரிவு அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோர் கோவிலில் கூட்டம் இல்லை என்று கூறி அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். மேலும், நான் கோவிலின் அறங்காவலர், அதனால் நான் கோவிலுக்கு செல்ல முடியும். இந்த வழக்கு அங்குள்ள சில உள்ளூர் மக்களின் அழுத்தத்தின் கீழ் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தாகூர் வலியுறுத்துகிறார்.