திரைப்பட பாணியில் கார்ப்பரேஷன் வங்கிக்குள் புகுந்து ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணம் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் அமைந்துள்ள கார்ப்பரேசன் வங்கியில் நேற்று திடீர் என ஆறு பேரை கொண்ட குழு வங்கிக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் தனகளிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து வங்கிக்குள் சரமாரியாக சுட்டதில் வங்கியின் காசாளர் உயிரிழந்தார். 


இந்த சம்பவத்தில், மேலும் 3 ஊழியர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து கொள்ளையர்கள் பணத்துடன் தப்பிச் சென்று விட்டனர். போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்களை அடையாளம் காண முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 3.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கபட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



இத சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி காட்சியை இணையத்தில் காவல்துறையனர் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.