மாட்டிறைச்சி தடை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
இறைச்சி மாடுகள் விற்கவும் வாங்கவும் சில கட்டுப்பாடுகள் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை கேரளா, மேற்கு வங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் மாட்டிறைச்சிக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசன் இந்த உத்தரவை எதிர்த்து, ஐதராபாத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது இந்த மனு இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் மத்திய அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தத்தோடு, 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.