புதுடெல்லி: நாடு முழுவதும் 110 இடங்களில் மத்திய புலனாய்வுத் துறை (The Central Bureau of Investigation) இன்று (செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தி வருகிறது. 19 மாநிலங்களில் வெவ்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஊழல், கிரிமினல் முறைகேடு மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பான 30 வெவ்வேறு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ஜூலை 2 ஆம் தேதி வெளியான செய்தியின்படி, நாட்டில் வங்கி மோசடியில் சிபிஐ சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் 18 நகரங்களில் 50 தளங்களில் சோதனை நடத்துகிறது. ரூ.640 கோடி மோசடி சம்பந்தமாக 14 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. சிபிஐயின் இந்த நடவடிக்கை 12 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை நடவடிக்கை விளம்பரதாரர்கள், நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் வங்கிகளின் ஊழியர்களுக்கு எதிராக செய்யப்படுகிறது. கர்நாடகாவின் கோலார், மும்பை, டெல்லி, லூதியானா, தானே, வல்சாத், புனே, கயா, குர்கிராம், சண்டிகர், போபால், சூரத், கர்னர் மற்றும் பழனி போன்ற பகுதிகளில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் காலையிலிருந்தே தொடர்கின்றன.