வங்கி மோசடி தொடர்பாக தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்பட 169 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன்களை பெற்று கொண்டு திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், சிபிஐ அதிகாரிகள் இன்று  பல்வேறு இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உட்பட 15 மாநிலங்களில் 169 இடங்களில் CBI அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் ரூ.7,000 கோடிக்கு அதிகமாக மோசடி நடந்துள்ளது தொடர்பாக CBI அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொள்கின்றனர். ஆந்திரா, சண்டிகர், தில்லி, குஜராத், ஹரியாணா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்களில் மொத்தமாக 169 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது.