மூத்த வழக்கறிஞர்கள்  இந்திரா ஜெய்சிங் மற்றும் அவரின் கணவர் ஆன்ந்த் க்ரோவர் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் CBI சோதனை நடத்தி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திரா மற்றும் ஆனந்த் இருவர் மீதும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயரில் தவறான முறையில் அந்நிய பணத்தை பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ இதற்கு முன்பு இருவர் மீதும் வழக்கு தொடுத்தது. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தை மீறியதாக தன்னார்வ தொண்டு நிறுவன வழக்கறிஞர்கள் மீது குற்றம் சாட்டப்ப்பட்டது. 


இந்த தம்பதிகள் வெளிநாட்டு நிதி பங்களிப்புகளை தவறாக பயன்படுத்துவதாகவும் நிதியை இந்தியாவுக்கு  வெளியே வெளிநாட்டில் செலவழித்ததாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. 


இந்த வழக்கில் 2009 மற்றும் 2014 ஆண்டுகளுக்கு மத்தியில் இந்திரா ஜெய்சிங் கூடுதல் பொது ஆணையராக இருந்தபோது தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பங்களிப்பு செலுத்திக் கொண்டிருந்ததாக சிபிஐ குற்றம் சாட்டுகிறது அந்த நேரத்தில் அவரின் வெளிநாட்டு பயணங்களின் செலவுகள் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமிருந்து வந்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 




இதுகுறித்து இந்திரா ஜெய்சிங் மற்றும் ஆனந்த் குரோவர் கூறுகையில் கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் வன்முறை தொடர்பான வழக்குகளிலும் சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கிலும் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததாலும் எங்களை பழிவாங்கும் நோக்கில் எங்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. நாங்கள் வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் எந்த நிதியையும் பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.