CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை முதல் தொடக்கம்
![CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை முதல் தொடக்கம் CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை முதல் தொடக்கம்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2019/02/14/140533-746579-students-engineering.jpg?itok=SbWXUQWZ)
சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் நாளை முதல் தொடங்கவுள்ளன.
சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் நாளை முதல் தொடங்கவுள்ளன.
சி.பி.எஸ்.இ10-ஆம் வகுப்புக்கு நாளை தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகளை 21,400 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர். இதற்காக சுமார் ஐயாயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை துவங்க உள்ள இந்த தேர்வு ஏப்ரல் 4ம் தேதி முடிவடைகிறது.
வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளைத் தடுக்க இந்த ஆண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகளை வழக்கத்தைவிட ஒருவாரம் முன்னதாகவே வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றிய தெளிவான தகவல்களை பெற cbse.nic.in ஏற்ற இணையத்தை பார்க்கவும்.