வெளியானது CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
CBSE Results 2023: முக்கிய அறிவிப்பு!! சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொத்தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதை எப்படி பார்ப்பது என்ற விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
CBSE 12th தேர்வு முடிவுகள் 2023: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இன்று 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுவை சற்று முன் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் தேர்ச்சி சதவீதம் 87.33% ஆகும், இது கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதமான 92.71% ஐ விட குறைவு. இதனிடையே மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 அன்று முடிந்தது. இதில் 12 ஆம் வகுப்புத் தேர்வை 16 லட்சத்துக்கும் மாணவர்கள் எழுதி இருந்ததனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் வாரியத்தின் இந்த அதிகாரப்பூர்வ வலைத்தளமான "cbse.gov.in அல்லது results.cbse.nic.in" இல் பார்வையிடுவதன் மூலம் தங்கள் தேர்வு முடிவுவைப் பெற முடியும். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்ளலாம் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று அதாவது மே 12 ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் வெளியானது. எனவே இப்போது சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுவை மாணவர்கள் "ஆன்லைனில், எஸ்எம்எஸ் மற்றும் டிஜிலாக்கர்" மூலம் சரிபார்க்கலாம்.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுவை 2023 ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுவை மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு இணையதளங்களுக்குச் சென்று சரிபார்க்கலாம்.
- cbseresults.nic.in
- results.cbse.nic.in
- cbse.nic.in
- cbse.gov.in
ஆன்லைனில் தேர்வு முடிவுவை பெறுவது எப்படி?
* results.cbse.nic.in அல்லது cbse.gov.in. என்ற இணையதளங்களுக்குள் செல்லவும்.
* முகப்பு பக்கத்தில் காணப்படும் லின்கில் நீங்கள் 12 ஆம் வகுப்பு மாணவராக இருந்தால் 'Senior School Certificate Examination Class XII Results 2023 Announced' என்ற லின்கையும் கிளிக் செய்யவும்.
* உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதிவு எண், பாஸ்வோர்ட் மற்றும் இதர விவரங்களை உள்ளீடு செய்துவிட்டு சப்மிட் செய்யவும்.
* தற்போது உங்களது தேர்வு முடிவு வெளிப்படும். அதை நீங்கள் டவுன்லோட் அல்லது பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
டிஜிலாக்கர் மூலம் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவுவை 2023 சரிபார்ப்பது எப்படி?
1 - மாணவர்கள் முதலில் DigiLocker digilocker.gov.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2 - இதற்குப் பிறகு, முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள CBSE போர்டு வகுப்பு 12 முடிவுகள் 2023 இன் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3 - இப்போது இங்கே கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். உங்கள் முன் ஒரு புதிய விண்டோ திறக்கும்.
4 - இதற்குப் பிறகு உங்கள் மார்க்ஷீட் உங்கள் திரையில் தோன்றும்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2023 SMS மூலம் எவ்வாறு சரிபார்க்கலாம்?
மாணவர்கள் சிபிஎஸ்இ போர்டு 12 ஆம் வகுப்பு முடிவை SMS மூலம் சரிபார்க்க முடியும். இதற்கு மாணவர்கள் தங்கள் மொபைல் போனில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் மட்டுமே செய்தால் போதும்.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவைப் பார்க்க, அதே எண்ணுக்கு CBSE12(space)Roll_Number என்று எழுதி SMS அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் எஸ்எம்எஸ் அனுப்பியவுடன், எஸ்எம்எஸ் மூலம் தங்களின் ரிசல்ட் பெறுவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ