CBSE: ஹன்சிகா & கரிஷ்மா முதல் இடம்; தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் முதலிடம்
சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளன.
டெல்லி: மே மாதம் 3 ஆம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்திருந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbse.nic.in, cbseresults.nic.in ஆகியவற்றில் காணலாம். மேலும், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தேர்வு முடிவுக் குறித்து பேசி வருகிறார். அந்த நேரத்தில் முதல் இடம் பிடித்த இரண்டு மாணவிகளை பற்றி பேரினார். இவர்களில் முதன்மையானவர் கஜியாபாத்தை சேர்ந்த ஹன்சிகா சுக்லா. இவர் 499 மதிப்பெண்களை பெற்றுள்ளார். மற்றொருவர் முசபர்நகரை சேர்ந்த கரிஷ்மா அரோரா. இவரும் 499 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
இந்தமுறை 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்ச்சி விகிதம் மொத்தம் 83.4 சதவிகிதம் ஆகும். அதில் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 88.70, மாணவர்களின் சதவீதம் 79.4 ஆகும்.