CBSE 12th Result 2024 Declared : சிபிஎஸ்இ நடத்திய 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ - வாரியம் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் தற்போது சற்று நேரத்திற்கு முன்பு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிபிஎஸ்இ 12 ஆம் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தேர்வு முடிவுகளை மாணவர்கள் Cbse.nic.in,cbse.gov.in அல்லது cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் அறிந்து கொள்ளலாம்.. தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை பார்க்க முடியும்.


மேலும் படிக்க | நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு! 96 நாடாளுமன்றத் தொகுதிகள், 1717 வேட்பாளர்கள்!


மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் விவரங்களை சிபிஎஸ்இ வெளியிடாது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் குறைந்தது 33 சதவிகித மதிப்பெண்கள் பெற வேண்டும். 


இந்நிலையில் சிபிஎஸ்இ இதுவரை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. 


மொத்த தேர்ச்சி சதவீதம் இதோ:
கடந்த ஆண்டு 87.33 சதவீதமாக இருந்த பொதுத் தேர்வில் இந்த ஆண்டு 87.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.65 அதிகம். இம்முறையும் 12 ஆம் வகுப்பு தேர்வில் ஆண்களை விட பெண்கள் அதிகம் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.


2024 சிபிஎஸ்இ 12 ஆம் தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது?
சிபிஎஸ்இ cbseresults.nic.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
CBSE Board Result 2024 இணைப்பைக் கிளிக் செய்யவும்
உங்கள் ரோல் எண் அல்லது பதிவு எண்ணுடன் உள்நுழையவும்
உங்கள் முடிவுகளைப் பார்க்க விவரங்களைச் சமர்ப்பிக்கவும்
கடைசியாக முடிவின் நகலை டவுண்லோட் செய்துக் கொள்ளவும்.


எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவை எவ்வாறு சரிபார்ப்பது?
CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை SMS மூலம் சரிபார்க்கலாம், இதற்கு மாணவர்கள் "CBSE 12 (ரோல் எண்) (DDMMYYYY - பிறந்த தேதி) (பள்ளி எண்) (மைய எண்)" என்று டைப் செய்து 7738299899 க்கு அனுப்ப வேண்டும்.


எஸ்எம்எஸ் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, மாணவர்கள் தங்கள் முடிவு தொடர்பான தேவையான அனைத்து தகவல்களையும் பெறுவார்கள்.


இந்த ஆண்டு, CBSE வாரியத்தில் மொத்தம் 1633730 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர், அவர்களில் மொத்தம் 1621224 மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் மொத்தம் 87.98 சதவீத தேர்ச்சி 1426420 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மேலும் படிக்க | 'பிரதமர் வருவாரா சொல்லுங்கள்... பொது விவாதத்திற்கு நான் தயார்' - ராகுல் கொடுத்த கிரீன் சிக்னல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ