Lok Sabha Election 2024: 18வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெறும் ஆந்திரப் பிரதேசம், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஜார்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களில் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்கவிருக்கிறது. இதற்குக் முன்னதாக ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 என மூன்று கட்டங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
இன்று பீகார், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும்.
நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள்
10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளுக்கான இன்றைய வாக்குப்பதிவில் (Lok Sabha Elections) ஆந்திரப் பிரதேசத்தின் 25 நாடாளுமன்றத் தொகுதிகள், பீகாரின் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி, ஜார்கண்டில் 4 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தின் 8 தொகுதிகள், மகாராஷ்டிராவின் 11 தொகுதிகள், ஒடிசாவின் 4 தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தின் 13 தொகுதிகள் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 8 தொகுதிகள் என மொத்த்ம் 96 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 147 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.
மேலும் படிக்க | திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? மோடியின் பேராசை பலிக்காது - கார்த்தி சிதம்பரம்
இன்று போட்டியிடும் 1,717 வேட்பாளர்களில், முக்கிய வேட்பாளர்கள் என்று பார்த்தால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியிலும், டிஎம்சி தலைவர் மஹுவா மொய்த்ரா, மேற்கு வங்க மாநிலத்திலும் போட்டியிடுகின்றனர். அரசியல்வாதிகளாக அவதாரம் எடுத்திருக்கும் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானின் அரசியல் எதிர்காலமும் இன்று முடிவாகும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ஆந்திர மாநில முதலமைச்சரின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா என பல பிரபலங்கள் இன்று மக்களின் தீர்ப்பை வாக்காக பெறப்போகிறார்கள்.
நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் மொத்தம் 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள 96 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு 4,264 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர், அதில் 1717 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
2024 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விபரம்
மூன்று கட்ட வாக்குப்பதிவில் 64.4 சதவீதம் என்ற அளவுக்கு வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்டம் வரை, 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 283 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவும், மே 26ஆம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் 1ஆம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ