மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிக்கப்பட்டு இருந்தது. மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என CBSE அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், இந்த தேர்வுக்கு, பிப்., 9ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. மார்ச், 9 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.


இந்நிலையில், சி.பி.எஸ்.இ., சார்பில், புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'நீட் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பத்தில், ஆதார் எண்ணில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில், சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும். 


ஆதார் தகவல்களும், பள்ளி விபரங்களும் வேறுபாடாக இருந்தாலும், ஆதார் எண் தகவல்களையே, விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். 'அதன்பின், பள்ளியில் உள்ள விபரங்களை, ஆதார் எண் அடிப்படையில் மாற்றி கொள்ள வேண்டும். மாறாக, தேவையற்ற வதந்திகளை நம்பி, தேர்வுக்கான பதிவுகளில் பிழைகளை ஏற்படுத்தி விட வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.