புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வியாழக்கிழமை (அக்டோபர் 14, 2021) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகளின் அட்டவணை அக்டோபர் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறியுள்ளது. வெளியிடப்பட்டவுடன், மாணவர்கள் தேர்வுக்கான அட்டவணையை மத்திய வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.nic.in அல்லது cbseacademic.nic.in இல் பார்த்து விவரங்களை தெரிந்துகொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிபிஎஸ்இ (CBSE) 10,12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகள் நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற உள்ளன. பாடத்திட்டத்தின் முதல் பாதியை மட்டுமே உள்ளடக்கிய MCQ எனப்படும் multiple choice questions வினாத்தாளில் இருக்கும் என்று மத்திய வாரியம் தெரிவித்துள்ளது. 


"10, 12 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவ பொதுத் தேர்வுகள் ஆஃப்லைனில் நடத்தப்படும்; அக்டோபர் 18 ஆம் தேதி இதற்கான அட்டவணை அறிவிக்கப்படும். 10, 12 ஆம் வகுப்புகளுக்கான டர்ம் -1 பொதுத் தேர்வுகள் 90 நிமிட அவகாசம் கொண்ட  அப்ஜெக்டிவ் வகை தேர்வாக இருக்கும்" என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.




ALSO READ: நவம்பரில் CBSE 10, 12 ஆம் வகுப்பு 2022 பொதுத்தேர்வுகள் : விரைவில் வெளிவரும் அட்டவணை


முன்னதாக, சிபிஎஸ்இ 2021-22 கல்வி ஆண்டிற்கான  10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் (Board Exams) இரண்டு பருவங்களில் நடத்தப்படும் என கூறியிருந்தது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ஒவ்வொரு அமர்விலும் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும் (முழு பாடத்திட்டத்தில் 50 சதவீதம்). 


அறிக்கைகளின்படி, பொதுத் தேர்வுகளின் முதல் அமர்வு 2021 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். பொதுத் தேர்வுகளின் இரண்டாம் அமர்வை 2022 ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில்  நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.


ALSO READ: 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - அக்டோபர் 12 ஆம் தேதி ஆலோசனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR