சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கியது. இந்த தேர்வு மார்ச் மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. 10-ம் வகுப்பு தேர்வை 11 லட்சத்து ஆயிரத்து 664 மாணவர்களும், 7 லட்சத்து 88 ஆயிரத்து 195 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர்கள் 19 பேர் என மொத்தம் 18 லட்சத்து 89 ஆயிரத்து 878 பேர் எழுதுகின்றனர். 12-ம் வகுப்பு தேர்வை 6 லட்சத்து 84 ஆயிரத்து 68 மாணவர்களும், 5 லட்சத்து 22 ஆயிரத்து 819 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தவர்கள் 6 பேர் என மொத்தம் 12 லட்சத்து 6 ஆயிரத்து 893 பேர் எழுதுகிறார்கள். 


10ம் வகுப்பு தேர்வு 5376 மையங்களிலும், 12ம் வகுப்பு தேர்வு 4983 மையங்களிலும் நடைபெறுகிறது. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 30 லட்சத்து 96 ஆயிரத்து 771 பேர் எழுதுகின்றனர். சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளோ, வதந்திகளோ தெரியவந்தால் உடனே சி.பி.எஸ்.இ.க்கு தெரிவிக்க வேண்டும்.