புதுடெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்கள் காரணமாக, சி.பி.எஸ்.இ. 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள், ஒரு வாரம் தாமதமாக அதாவது (மார்ச் 9-ம் தேதி) தொடங்குகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள், மார்ச் முதல் வாரம் தொடங்குவது வழக்கம்.


இந்நிலையில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கி, மார்ச் 8-ம் தேதி முடிவடைகின்றன.


சி.பி.எஸ்.இ. தேர்வுகள், அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுபவை என்பதால், திட்டமிட்டபடி தொடங்கினால், மேற்கண்ட மாநிலங்களில் தேர்வுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதப்பட்டது.


எனவே, 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, இந்த தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்கும் என்று நேற்று அறிவித்தது. 


சூழ்நிலைகளை கவனமாக ஆராய்ந்த பிறகுதான், தேர்வுகளை ஒரு வாரம் தாமதமாக நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்கள் தேர்வுக்கு தயார் ஆவதற்கு கூடுதல் கால அவகாசம் கிடைக்கும் என்று சி.பி.எஸ்.இ அறிக்கையில் வெளியிட்டது.


மேலும், முக்கிய பாடங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொண்டுள்ளோம். என்ஜினீயரிங் பொது நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.), மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (நீட்) ஆகியவற்றுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, அந்த நுழைவுத்தேர்வுகளுக்கு முன்பே, சி.பி.எஸ்.இ. தேர்வுகள் முடிவடைவதை உறுதி செய்துள்ளோம்.


அத்துடன், உரிய நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதற்காக பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இன்னும் உத்தரபிரதேச சி.பி.எஸ்.இ தேர்வு தேதி தாள் வெளியிடப்படவில்லை.


மேலும் தகவலுக்கு, மாணவர்கள் சி.பி.எஸ்.இ புகுபதிகை செய்யவும்.


வலைத்தளம்http://cbse.nic.in/newsite/index.html