சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடுவதாக அறிவிப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் மார்ச் 29 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 27 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று செய்தி வெளியானது. தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள மாணவர்கள் ஆவலாக காத்திருகின்றார்.


இந்நிலையில், சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாவதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ.-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbse.nic.in, cbseresults.nic.in ஆகியவற்றில் காணலாம். 


மேலும், மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உங்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை எப்படி இங்கே பார்ப்பது: 


படி 1: வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்கு செல்லும்.


படி 2: முகப்பு பக்கத்தில், '10th Result 2019' இணைப்பை கிளிக் செய்யவும்.


படி 3: இணைப்பு திறந்தவுடன், பெயர் மற்றும் ரோல் எண் போன்ற உங்கள் விவரங்களை உள்ளிடவும்.


படி 4: நீங்கள் உங்கள் சான்றுகளை உள்ளிட்ட பிறகு 'Submit' என்பதைக் கிளிக் செய்க. 


படி 5: உங்களின் தேர்வு முடிவுகளின் மதிப்பெண் திரையில் காட்டப்படும். 


படி 6: அந்த பதிவை டவுளோடு அல்லது நகல் எடுத்துக்கொள்ளவும்.