கடந்த மார்ச் மாதம் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றன. நாடு முழுவதும் 10,678 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சத்து 98 ஆயிரத்து 891 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 6,28,865 பேர் மாணவர்கள், 4,70,026 பேர் மாணவிகள் ஆவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் கடந்த மாதம் மே 28-ம் தேதி வெளியிடப்பட்டன. நொய்டாவை சேர்ந்த ரக்‌ஷா கோபால் 12-ம் வகுப்பு தேர்வில் 99.6% மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.


முடிவுகள் வெளியானதும், மாணவ-மாணவிகள் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதாவது, ஒரு மாணவர் மற்ற பாடங்களில் 90 சதவிகித மதிப்பெண் எடுத்தார். ஆனால், கணிதப் பாடத்தில் மட்டும் 68 மதிப்பெண் எடுத்தார். அவர்மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து பார்த்த போது, முடிவில், அவர் 68 மதிப்பெண் அதிகம் எடுத்து மொத்தம் கணிதத்தில் 90 மதிப்பெண் எடுத்தது தெரிய வந்துள்ளது. 


இது போல, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த பலருக்கும், குறைந்த மதிப்பெண் போடப்பட்டது தெரியவந்துள்ளது.


குறிப்பாக, மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணில் இருந்து, போடப்பட்ட மதிப்பெண்ணுக்கு 400 சதவிகிதம் இடைவெளி உள்ளதாக கூறப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, மதிப்பெண் கூட்டுதலில் பிழை ஏற்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிரச்சியடைந்துள்ளனர்.