CBSE, 12-ஆம் வகுப்பு மறுதேர்வு தேதி வெளியானது!
ரத்து செய்யப்பட்ட CBSE, 12 ஆம் வகுப்பு 2 பொருளாதார தேர்விற்கான மறுத்தேர்வு வரும் ஏப்ரல் 25-ஆம் நாள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
ரத்து செய்யப்பட்ட CBSE, 12 ஆம் வகுப்பு 2 பொருளாதார தேர்விற்கான மறுத்தேர்வு வரும் ஏப்ரல் 25-ஆம் நாள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
CBSE 12 ஆம் வகுப்பு பொருளாதார பாடம் மற்றும் 10 ஆமு வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்ததால், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என கடந்த மார்ச் 28-ம் தேதி CBSE அறிவித்தது.
இந்நிலையில் தற்போது, 12 ஆம் வகுப்பு 2 பொருளாதார தேர்விற்கான மறுத்தேர்வு வரும் ஏப்ரல் 25-ஆம் நாள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேலையில் 10 ஆம் வகுப்பிற்கான கணித தேர்வு குறித்து தெரிவிக்கையில்...
10 ஆம் வகுப்பு வினாத்தாள்களானது ஹரியான மற்றும் டெல்லி பகுதியில் கசிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. எனவே இன்னும் 15 நாட்களில் 10 ஆம் வகுப்பு தேர்விற்கான தேதி அறிவிக்கப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலாளர் அனில் ஸ்வரூப் அவர்கள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்!