டெல்லி: நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு சிபிஎஸ்இ +2 வகுப்பு பொத்தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்துள்ளன. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. cbse.results.nic. இந்த என்ற இணையதளத்தில் மாணவ மாணவிகள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வில் சென்னை மண்டலம் 97.79% தேர்ச்சியுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளின் படி முதல் மூன்று இடத்தைப் பெற்றுள்ள மண்டலங்கள் தென் இந்தியாவை சேர்ந்தவை ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வில், கேரளாவின் திருவனந்தபுரம் மண்டலம் முதல் இடத்திலும், கர்நாடகாவின் பெங்களூரு மண்டலம் இரண்டாவது இடத்திலும், தமிழகத்தின் சென்னை மண்டலம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. திருவனந்தபுரம் 98.83 சதவீத தேர்ச்சியுடன் சிறப்பாக செயல்பட்டுள்ள மண்டலமாக உருவெடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து 98.16 சதவீத தேர்ச்சியுடன் பெங்களூரு இரண்டாவது இடத்தையும், 97.79 சதவீதத்துடன் சென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.



மேலும் படிக்க | CBSE class 12th Result: சிபிஎஸி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது


சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகளில் ஆண்களை விட பெண்கள் 3.29 சதவீதம் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பெண்கள் 94.54 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்களின் தேர்ச்சி விகிதம் 91.25 ஆக உள்ளது. தேர்வு எழுதிய அனைத்து மூன்றாம் பாலின மாணவர்களும் தேர்ச்சி பெற்று, அவர்களுடைய தேர்ச்சி சதவிகிதம் 100 ஆக உள்ளது. 


இந்த ஆண்டும் சிபிஎஸ்இ +2 வகுப்பு பொதுத் தேர்வு இரண்டு டர்ம்களாக, அதாவது இரு பருவங்களாக நடத்தப்பட்டது. தேர்வின் இறுதி முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ அதிகார பூர்வ இணையதளமான cbse.results.nic.in என்ற இணையதளத்திலும் results.cbse.nic.in என்ற இணையத்தளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க | CBSE 12 Result 2022: எந்தெந்த செயலிகளில் சிபிஎஸ்இ ரிசல்ட் பெறலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ