சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,


இந்தியாவில் குளிர்கால திருவிழாக்கள் வர தொடங்கி உள்ளன. இந்த சூழலில், தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால், மக்கள் சுவாசப் பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக முதியவர்களும், குழந்தைகளும் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, அனைத்து பண்டிகைகளையும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் கொண்டாடப்பட வேண்டிய அவசியம் நிலவி உள்ளது.


 மக்களிடையே அமைதி மற்றும் சகோதரத்துவம் பாதிக்காத வகையிலும் சமூக அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.