இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது கூகுள்!!

இந்தியாவின் சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் தனது முதல் பக்கத்தில் உள்ள கூகுள் டூடுலில் இந்திய சின்னத்தை இடம்பெறச் செய்துள்ளது.
விடுமுறை தினங்கள், உலக நிகழ்வுகள், சாதனை செய்த மனிதர்களை கொண்டாடும் விதமாக் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கூகுள் டூடுலில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் இன்று 71-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது டூடுலில் இந்திய தேசியப் பறவையான மயில் இருபுறமும் வீற்றிருக்க, அதற்க்கு நடுவில் அசோகச் சக்கரமும், மேலே பாராளுமன்றம் கட்டிடம் இடம்பெற்றுள்ளது.
மேலும், கூகுள் நிறுவனம் இந்திய சுதந்திர தினத்தை பற்றி ஒரு சிறப்பு செய்தியை எழுதி உள்ளது