எல்லாத்துக்கும் நோ சொல்ற ஆளா நீங்க... சபாஷ்... அப்போ உங்களுக்குத்தான் இதுல ஃபர்ஸ்ட் மார்க்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதனின் மனசு ஒரு குரங்கு மாதிரி என்பார்கள். ஆம், இல்லை என்ற இரு வார்த்தைக்குள்ளே எப்பொழுதும் குழம்பிக் கொண்டே இருக்கும். உதாரணமாக ஒரு விஷயத்திற்கு நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சரி என்று சொல்லி விட்டாளே போதும் அதை உங்கள் மனநிலை சும்மாவே விடாது. ஏன் சரின்னு சொன்னோம், இல்லை என்று சொல்லி இருக்கலாமா என்று ஒரு நிலையில் இருக்கவே இருக்காது. 


உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நபர் ஒரு பார்ட்டிக்கு உங்களை அழைத்தால் என்ன செய்வீர்கள்? அன்னைக்கு உங்களுக்கு அதிகமான வேலை வேற இருக்கிறது. அன்பான ஒருவர் கூப்பிடும் போது இல்லை என்று சொல்லவும் மனம் இருக்காது அல்லவா. கண்டிப்பாக இந்த புலம்பல் உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டையுமே பாதிப்படையச் செய்து விடும். எப்பொழுதும் நம்மால் செய்ய முடியாத ஒரு விஷயத்திற்கு நாம் சரி என்று சொல்வது நல்லது கிடையாது. இல்லை என்றும் சொல்லிப் பழக வேண்டும். அப்பொழுது தான் நம்முள் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.


இல்லை என்று சொல்வதன் பயன்:- நீங்கள் ஒரு விஷயத்திற்கு உங்கள் மனதின் மொழியை புரிந்து கொண்டு இல்லை என்று சொல்லிப் பாருங்கள். கண்டிப்பாக அது உங்களுக்கு நன்மை அளிக்கும். அது உங்கள் மன நலத்தை மட்டுமல்ல உடல் நலத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவும்.


நெருங்கிய நண்பர்களின் நிகழ்ச்சி அழைப்பு, அன்பானவர்களின் அழைப்பு, அன்பானவரின் வேண்டுகோள் போன்றவைகளுக்கு நீங்கள் இல்லை என்னால் வர முடியாது என்ற பதிலை சொல்லிப்பாருங்கள். இது உங்களுக்கு அநாவசியமான மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவும்.


மேலும், நீங்கள் செய்யா முடியாத ஒரு விஷயத்திற்கு 'சரி' என்று சொல்லி செய்ய முடியாமல் போனால் இப்படியே நீங்கள் செய்து வந்தால் கண்டிப்பாக ஒரு நாள் உங்களை மற்றவர்கள் குறைத்து மதிப்பிடக் கூடும். இது உங்கள் சுய மரியாதையை பாதிக்கும். எனவே உங்களால் முடியாத விஷயத்திற்கு 'இல்லை' என்று சொல்லி விடுங்கள். இது உங்கள் வாக்கிலுள்ள உண்மையை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறும். "வாக்கு கொடுத்தால் அவர் காப்பாற்றுவார்" என்று உங்களை எல்லாரும் பாராட்டுவார்கள். உங்கள் சுய மரியாதையும் உயரும். இதுவும் உங்கள் உடல் மற்றும் மன நிலையை ஆரோக்கியமாக வைக்க உதவும்.


நீங்கள் "இல்லை" என்று மனசார ஒரு விஷயத்திற்கு சொல்லி விடும் போது அது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தரும். நல்ல தூக்கம் நல்ல உடல் நலம் மற்றும் சரும அழகையும் காக்கும். இதனால் நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.