உயரும் ஓய்வூதியம்; அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது!
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில்; அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது!
நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களை குறிவைத்து மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அந்த வகையில் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 2004-ஆம் ஆண்டு ஜனவரி அல்லது அதற்கு பின் பணியில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகையில், மத்திய அரசின் பங்களிப்பு தொகையை உயர்த்தி வழங்க முடிவு எடுத்துள்ளது.
இதன்மூலம் 14 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக மத்திய அரசு பணியில் இருந்த ஊழியர்களுக்கு கிடைக்கும் ஓய்வூதிய தொகை அதிரடியாக உயரும் வாய்ப்புள்ளது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதிய தொகையில் 10% ஓய்வூதிய நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது. இத்துடன் மத்திய அரசும் 10% பங்களிப்பை அளிக்கிறது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவின்படி, மத்திய அரசு அளிக்கும் பென்சன் நிதி பங்களிப்பு 14%-மாக உயர்த்தப்பட உள்ளது. இதன் காரணமாக 60 வயதில் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகை கனிசமாக அதிகரிக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும் பங்களிப்பை உயர்த்த நிதி மசோதாவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த புதிய பயன் வரும் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தெலங்கானா, ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தல் விதிமுறைகளை கருத்தில் கொண்டு இந்த புதிய பயன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு நிறுத்தி வைத்துள்ளது.